என் பாக்கெட்டில்
கை வைக்கும் போது
அவள் கிடைப்பாள்,
இப்பொழுது
கடைக்குச் சென்று பாக்கெட்டில்
கை வைக்கும் போது
அவள் இல்லை.
கொஞ்சம் வருத்தம் கூட ...
இருவரும் ஒன்றாக திரிந்தோம் வெகுநாட்கள்.
இவளை பார்க்கும்போதெல்லாம்
உன் ஞாபகம் .
இவள் இல்லை
உன் ஞாபகம் மட்டும் இருக்கிறது.
என் பாக்கெட்டில்
ஒருவள் வருவாள்,
அவளை பார்த்தால்
இவள் ஞாபகம்
இவளை நினைத்தால்
உன் ஞாபகம்.
என் மனமார்ந்த நன்றி உனக்கு.
Monday, May 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment