இன்று இவளுக்கு
உலகம் கொடுத்த ஒரு பொன் நாள்.
என்னை பெற்ற இவளுக்கு
இவ் 365 நாட்களும் பொன் நாள்தான்.
அழுதாள் ஆறுதல் சொல்வாள்
சிரிச்சால் ஆனந்தம் படுவாள்
தத்தளித்தால் அறிவுரை சொல்வாள்
பாலுட்டி பசிதீர்பால்
மடி படுத்து உறங்க வைப்பாள்
கொஞ்சி கொஞ்சி சொருட்டுவால்
என்னை அவள் ராசா என்று அழைப்பால்
என்னை சுமையின்று
தூக்கி செல்வாள்
அதை சுகமாக கருதுவாள்
கதை சொல்லி படுக்க வைப்பாள்
கண் மூடினாலும் கதை சொல்லுவாள்
கட்டி பிடித்து முத்தம் கொடுப்பாள்
இந்த முத்தத்திற்கு என்னவிலை இவுலகில் ?
இவளுக்கு பிள்ளையாக பிறந்தது
எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ .
ஜென்மம் இருந்தால் இவளுக்கு மட்டும்
பிள்ளையாக பிறக்க வேண்டும்.
1 comment:
நானும் தொட்டணம்பட்டிதா, பரவா இல்லையே நம்ம ஊர்ல இருந்து வந்து நிறைய பேரு தமிழ் கவித எழுதிரெங்கல.சந்தொசமா இருக்குப்பா if u r free visit my blog paulsharp45@blogspot.com I am wrkng as a lecture n Chennai.
Post a Comment